விம்பிள்டன் டென்னிஸ் ...  முதல்முறையாக காலிறுதியில் நுழைந்தார் ஆஷ்லி பார்ட்டி...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஃபெடரர், ஆஷ்லி பார்ட்டி உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
விம்பிள்டன் டென்னிஸ் ...  முதல்முறையாக காலிறுதியில் நுழைந்தார் ஆஷ்லி பார்ட்டி...
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான நோவாக் ஜோகோவிச், 20ஆம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினுடன் மோதினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து, 12ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். 
இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  
மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவாவை வெளியேற்றி, முதல்முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com