உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதில் 2 வது இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்களை வீழ்த்திய அஷ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இதுதவிர, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 440 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 8வது இடத்தை பிடித்துள்ளார்.