தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற 65-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஷாட் கன் ஜூனியருக்கன பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிலா ராஜா பாலு பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பிய வீராங்கனை நிலா ராஜா பாலுவிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஷீரடியில் இருந்து விமான மூலமாக சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் வீராங்கனை நிலா ராஜா பாலுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.