காமன்வெல்த் போட்டி: முதன் முதலில் தங்கம் வென்று அசத்திய பிவி சிந்து!!

காமன்வெல்த் போட்டி: முதன் முதலில் தங்கம் வென்று அசத்திய பிவி சிந்து!!
Published on
Updated on
1 min read

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதன்முதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கனடாவின் மிச்செல்லி-ஐ வீழ்த்தி அபாரம்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 5ம் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னதாக சிங்கப்பூரின் யோ ஜியாவை, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதிசெய்த அவர், இறுதிப்போட்டியில் கனடாவின் மிச்செல்லி உடன் களம் கண்டார். இதில் 21-க்கு 15 மற்றும் 21க்கு 13 என்ற செட் கணக்கில் மிச்செலை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தல்

காமன்வெல்த் போட்டிகளில் 2014ம் ஆண்டு வெண்கலத்தையும் 2018ம் ஆண்டு தங்கத்தையும் வென்ற பி.வி.சிந்து, முதன்முறையாக தற்போது தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com