நேற்று 2022 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அணிகள் வீரர்களை போட்டி போட்டி ஏலம் கேட்டு வந்தனர். மீதுமுள்ள வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர். இதில், இஷான் கிஷன் நேற்று அதிகபட்சமாக ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார். இதேபோல் தவான் பஞ்சாப், ஸ்ரேயாஸ் கொல்கத்தா, அஸ்வின் ராஜஸ்தான், டு பிளெஸ்ஸிஸ் பெங்களூரு அணிக்கும் ஏலம் விடப்பட்டனர்.
நேற்று ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நடந்து கொண்ட விதம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே எந்த வீரர்களுக்கும் ஏலம் கேட்கவிலை.. கடைசியில் ஷாருக்கான், திவாட்டியா போன்ற வீரர்களை மட்டுமே சிஎஸ்கே ஏலம் எடுத்தது.
சிஎஸ்கே அணி தங்களில் பழைய டீமையே எடுக்கும் நோக்கத்தில் செயல் பட்டது. அதனாலையே சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியோடு போராடி ராயுடுவை 6.75 கோடிக்கும், பிராவோவை 4.40 கோடிக்கும் ஏலம் எடுத்தது. ஷரத்துல், டு பிளசிஸ், ஹஸல்வுட் ஆகிய வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சிஎஸ்கே அணி மீண்டும் எடுத்தது.
இந்நிலையில், சிஎஸ்கே அணியில் ஹஸல்வுட் இல்லாத காரணத்தினால் 150 கீமி வேகத்தில் பந்துவீச்சும் பௌலர்கள் இல்லை. மேலும் அணியில் அதிகவேகத்தில் பௌலிங் செய்ய கூடிய வீரர்கள் இல்லாததால், சிஎஸ்கே அணிக்கு நல்ல பாஸ்ட் பௌலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது..
தற்போது, வேகப்பந்து வீசும் வீரர்கள் இல்லாதால், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துஷார் தேஷ்பாண்டே என்ற 26 வயது இளம் வீரரை ஏலம் எடுத்தது. மும்பையை சேர்ந்த இவர் கிளாஸ் ஏ கிரிக்கெட் வீரர் ஆவார். பல போட்டிகளில் நன்றாக விளையாடியவர்.
கடந்த 2020 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதில், 5 போட்டிகள் ஆடி 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதேபோல் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக நெட் பவுலிங்கில் சில போட்டிகளில் பந்து வீசினார். 150 கிமீ வேகத்தில் யார்க்கர் மற்றும் பவுன்சர் வீசுவது இவரது திறமை. வெறும் 20 லட்சத்துக்கு அவர் எடுக்கப்பட்டார். தற்போது சிஎஸ்கே அணியில் அதிக வேக பந்து வீச்சாளர் ஷரத்துல் தாக்கூர் இல்லாத காரணத்தினால், தேஷ்பாண்டேவை சிஎஸ்கே எடுத்துள்ளது.