சென்னை அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல டோனி...

சென்னை அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட சிறுமிக்கு தன் கையேழுப்பம் கிரிக்கெட் பந்தை பரிசாக சென்னை அணி கேப்டன் தோனி அளித்தார்.
சென்னை அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட சிறுவர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தல டோனி...
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றி தேடி தந்தார். அப்போழுது சென்னை அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சிறுமி ஒருவர் அழுத காட்சி மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும் சென்னை அணி ஒரு குடும்பம் என்பதை இந்த புகைப்படம் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ஆனந்த கண்ணீரில் அழுத சிறுமிக்கு   டோனி தன் கையேழுத்துயிட்ட கிரிக்கெட் பந்தை பரிசாக கொடுத்தார்.அந்த புகைப்படமும் இணையத்தில் அதிகபேரால் பகிரப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com