மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரான வின்செண்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கத்தில் களம் இறங்குகிறது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கேவும் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. சரியாக ஏழரை மணிக்கு தொடங்கக்கூடிய இப்போட்டியைக் காண நான்கு மணியிலிருந்தே ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டு வருகின்றனர்.
கைகளில் கொடி, மஞ்சள் ஜெசி, தோனியின் உருவபடம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளிக்கும் விதமாக ரசிகர்கள் திரண்டு வரும் சூழ்நிலையில், 2002 ஆம் ஆண்டிலிருந்து தோனியின் தீவிர ரசிகரான வின்செண்ட், தல தோணி என்ற பெயருடன் மஞ்சள் நிற மிதிவண்டியில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் முகத்திலும் எம் எஸ் டி என்று எழுதி வர்ணம் பூசி தல தோனியின் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.