அவரே தான்... Form-க்கு வந்த தோனியை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.. இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!!

அவரே தான்... Form-க்கு வந்த தோனியை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.. இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!!

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கான பயிற்சியை அனைத்து அணிகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதில், தல தோனி பேட்டிங் செய்த விடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இதை பார்த்து விட்டு தோனி பழைய Formக்கு வந்துட்டாரா என ஆர்வமுடன் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் தூனாக இருப்பவர் தோனி. கடைசி ஓவர்களில் வந்து அதிரடியாக விளையாடி பல போட்டிகளில் தனி நபராக வெற்றியை தேடி தந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி, கடந்த 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. தோனி 2020ல் 14 போட்டிகளில் 200 ரன்களும், 2021ல் 16 போட்டிகளில் 114 ரன்களும் எடுத்தார். விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் மட்டும் சிறப்பாக செயல்பட்ட தோனி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் மேற்கொண்டு வருகிறது. அது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தோனி பழைய பார்ம்க்கு திரும்பியுள்ளார் என தெரிகிறது. பழைய மாதிரி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி உற்சாகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் மெர்சல் பேட்டிங் வீடியோவும் வெளியாகியுள்ளது. தோனி பழைய பார்முக்கு வந்து கொண்டிருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பெரும் மாற்றத்தை எதிர்பாக்கலாம். இதனை கண்ட தோனி ரசிகர்கள்.. "எங்க தல திரும்ப வந்துட்டாரு" என பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.