இந்தியா முழுக்க ஒருநாள் விடுமுறை,.! 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் கோரிக்கையை ஏற்ற பிரதமர் நேரு.! 

இந்தியா முழுக்க ஒருநாள் விடுமுறை,.! 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் கோரிக்கையை ஏற்ற பிரதமர் நேரு.! 

`பறக்கும் சீக்கியர்` என்று அழைக்கப்பட்ட மில்கா சிங்,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கா இடத்தை பெற்று புகழ்பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் போட்டியிட்டு 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுக்க ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது என்பது தான். சுதந்திரத்திற்கு முன் பாகிஸ்தான் பகுதியில் பிறந்த மில்கா சிங் பிரிவினையின் போது தனது தந்தையை பாகிஸ்தானின் இழந்தார். பின் இந்தியாவுக்கு வந்த அவர் இந்தியாவுக்குகாக 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தொடங்கினார். 

1959 இல் இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மில்கா சிங் அங்கு 400 மீட்டர் ஓட்டத்தில் உலக சாம்பியனான மால்கம் ஸ்பென்ஸ் என்பவரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கம் இதுவாகும். 

இந்த வெற்றியின் பின் அப்போது இங்கிலாந்துக்காக இந்திய தூதரான விஜயலட்சுமி பண்டித் மில்கா சிங்கை வாழ்த்தி இந்திய பிரதமர் நேரு அவரிடம்  பேச ஆசைப்படுவதாக கூறினார். அதன்பின் மில்கா சிங்கிடம் பேசிய நேரு இந்தியாவுக்காக இவ்வளவு பெரிய சாதனையை செய்த உங்களுக்கு என்ன வெகுமதி வேண்டும் என்று கேட்ட இந்தியா முழுக்க ஒருநாள் விடுமுறை விடவேண்டும் என்று மில்கா சிங் கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுக்க ஒருநாள் விடுமுறை விட்டதாக மில்கா ஒரு நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டுள்ளார்.