இப்போ மட்டும் எப்படி இந்த சுமை வந்தது? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

இப்போ மட்டும் எப்படி இந்த சுமை வந்தது? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்து விளையாடுவதால் தான் இந்திய அணியினரால் உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

ஆதரவும் எதிர்ப்பும்:

சிலர் வீரர்களின் இந்த விமர்சனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐ.பி.எல் போட்டிகள் மூலம் இளம் வீரர்கள் நிறைய பேர் ஐ.பி.எல். போட்டியின் மூலம் வருவதால் ஐ.பி.எல் போட்டிகளை குறை சொல்லக் கூடாது என கூறிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஐ.பி.எல் போட்டிகள் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

அப்போது களைப்பாக இல்லையா?

இது குறித்து பேசி அவர், தற்போது நியூசிலாந்து தொடருக்கு இந்திய அணி செல்கிறது. அந்த அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வீரர்களின் பணிச்சுமை காரணமாக சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் ஐபிஎல் தொடர் முழுவதையும் ஓய்வின்றி விளையாடுகிறீர்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் போது உங்களுக்கு களைப்பாக இருந்தது இல்லையா?

கவாஸ்கர் கேள்வி:

அது ஏன் இந்தியாவுக்காக விளையாடும்போது மட்டும் உங்களுக்கு பணிச்சுமை நினைவுக்கு வருகிறது. கவர்ச்சிகர தொடர்களில் மட்டும் சீனியர்கள் விளையாடுவது தவறு கிடையாதா? நீங்கள் முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது பணிச்சுமை என்ற கேள்வி எப்படி வரப் போகிறது? 

தனி ஊதியம்:

முதலில் வீரர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள். நீங்கள் அணியில் தேர்வு செய்யப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு தனி ஊதியம் கிடைக்கிறது. உங்களால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்றால் எதற்கு பிசிசிஐ இடம் இருந்து சம்பளம் வாங்குகிறீர்கள். நீங்கள் வீரர்களிடம் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் உங்களுக்கு ஆண்டு சம்பளம் கிடையாது என்று கூறுங்கள். அப்போது எத்தனை வீரர்கள் தொடர்களில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார்கள் என்று நாம் பார்ப்போம். 

இத்தனை பேர் எதற்கு?

உங்கள் அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் அணியில் இருக்கும் போது தனியாக பேட்டிங் என பயிற்சியாளர் எதற்கு? டிராவிட் ஒன்று சொல்லுவார் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ராத்தோர் ஒன்று சொல்லுவார். இதனை கேட்கும் போது பேட்ஸ்மேன்கள் குழம்பி விடுவார்கள். யார் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். இத்தனை பேர் தேவையில்லை.

1983 இல்:

நாங்கள் 1983 இல் உலக கோப்பையை வெல்லும் போது எங்களுக்கு ஒரே ஒரு மேனேஜர் மட்டும் தான் இருந்தார். ஆனால் இப்போது வீரர்களை விட அணி நிர்வாகிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இதனால் வீரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். முக்கியமான நபர்களை மட்டும் வீரர்களுடன் அழைத்து செல்லுங்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com