விறுவிறுப்பான போட்டியில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா...!

விறுவிறுப்பான போட்டியில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா...!

ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா, சீனாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனை தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. 

தொடர்ந்து 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது. இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்றிரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 18-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 4 கோல் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com