வேகமற்ற பந்துவீச்சால் வீழ்ந்த இந்தியா!!!

வேகமற்ற பந்துவீச்சால் வீழ்ந்த இந்தியா!!!

இந்தியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி:

மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. குறிப்பாக கே.எல்.ராகுல், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அசத்தலாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா, 30 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். 

ஆஸ்திரேலியா அணி:

தொடர்ந்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கம் முதலே அதனுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த ஆஸ்திரேலிய வீரர்கள், ரன் குவிப்பில் இறங்கினர். 19 புள்ளி 2 ஓவர்களிலேயே, அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. கடைசி நேரத்தில் மத்யூ வேட், 21 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். 

வேகமற்ற பந்துவீச்சு:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோசமான பந்துவீச்சால் இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.  புவனேஷ்வர் குமார் (4-0-52-0), ஹர்ஷல் படேல் (4-0-49-0). உமேஷ் யாதவ் (2-0-27-2), ஹர்திக் பாண்டியா (2-0-22-0) ஆகியோர் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா எளிதாக இலக்கை அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் (61), மேத்யூ வேட் (45*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்திய பேட்டர்கள்:

முன்னதாக, ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் கேஎல் ராகுல் 35 பந்தில் 55 ரன்களும் எடுத்தனர்.  இவர்களீன் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 208/6 ரன்கள் எடுக்க முடிந்தது. மூத்த பேட்டர்கள் விராட் கோலி (2) மற்றும் ரோஹித் சர்மா (11) ஐந்தாவது ஓவரில் வீழ்ந்த பிறகு, சூர்யகுமார் யாதவ் (25 பந்துகளில் 46) மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

டி-20 இரண்டாவது ஆட்டம்:

இந்த வெற்றியின் மூலம், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த டி20 போட்டி, நாளை மறுநாள் நாக்பூரில் நடைபெறுகிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com