உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றன.
இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதற்கிடையே, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தோல்வி, புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.