அயர்லாந்துக்கு எதிரான டி20: இடைவிடாத மழையால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி!

அயர்லாந்துக்கு எதிரான டி20: இடைவிடாத மழையால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி!

அயா்லாந்துக்கு எதிரான டி20 கிாிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

3 போட்டிகள் கொண்ட டி20 கிாிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலாவது டி20 போட்டி 18.08.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வீரா்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா். அந்த அணியினா் 30 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினா். பின்னர் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து  அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 6 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com