ஒரே நாளில் 7 பதக்கம் வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்...!

ஒரே நாளில் 7 பதக்கம் வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்...!

20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஆன்டிம் பங்கல், சவிதா ஆகியோர் தங்க பதக்கம் வென்று அசத்தினர்.

ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், 20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். 

இதேபோல் 62 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் சவீதா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மகளிருக்குகான  53 கிலோ எடைப்பிரிவில் ஆன்டிம் பங்கல் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 65 கிலோ எடைப்பிரிவில் ஆன்டிம் வெள்ளியும், 57 கிலோ எடைப்பிரிவில் ரீனாவும், 72 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷிதாவும் வெண்கலப்பதக்கம் வென்றனர். ஒரே நாளில் இந்திய அணி மொத்தம்  7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அவர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com