முதல் முறையாக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.... மூன்று தரவரிசைகளிலும் முதலிடம்!!!

முதல் முறையாக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.... மூன்று தரவரிசைகளிலும் முதலிடம்!!!

நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை எட்டியுள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பர்-1 இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.  நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.  இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை முதலிடத்திலிருந்து வெளியேற்றி அந்த இடத்தை பிடித்தது இந்தியா.  தற்போது மூன்று தரவரிசைகளிலும் இந்தியா முதலிடத்தை எட்டியுள்ளது.  

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.  முதன்முறையாக இந்திய அணி ஒரே நேரத்தில் மூன்று போட்டிகளிலும் முதலிடத்தை எட்டியுள்ளது.  இதற்கு முன்பு 2014-ல் தென்னாப்பிரிக்க அணி ஒரே நேரத்தில் மூன்று போட்டிகளிலும் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 115 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com