ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக இதுவரை இந்திய அணி 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதனையடுத்து ஒரு அணிக்கு எதிராக அதிக போட்டியில் (93) வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பெற்றுள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் அணி 92 வெற்றிகளை இலங்கை அணிக்கு எதிராகவும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 92 வெற்றிகளை ஆஸ்திரேலிய அணியும் பெற்று சமமாக இருந்த நிலையில் தற்போது இந்திய அணி அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக ஒன்பது முறை தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.