ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவின் ஹங்சௌ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜாஸ், ஜோதி சுரேகா இணை தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவு 35 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் ராம், மஞ்சு ராணி இணை வெண்கலம் வென்று அசத்தியது.
முன்னதாக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளார்.
இதுவரை பதக்கப்பட்டியலில் இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களை வென்று தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்கள் பெற்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 70 பதக்கங்கள் பெற்றதே அதிக பதக்க எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடதக்கது.