" திருடன் என்றைக்குமே தனது தவறினை ஒப்புக்கொள்ள மாட்டான்": பிரிஜ் பூஷன் மீது சர்வதேச நடுவர் குற்றச்சாட்டு!

" திருடன் என்றைக்குமே தனது தவறினை ஒப்புக்கொள்ள மாட்டான்": பிரிஜ் பூஷன் மீது சர்வதேச நடுவர் குற்றச்சாட்டு!

சர்வதேச நடுவர் ஜக்பீர் சிங், சென்ற வியாழக்கிழமை, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றசாட்டு வழக்கு சூடு புடிக்கும் வகையில், சாட்சி ஒன்றைக் கூறியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: " 2007 முதல் உலக மல்யுத்த கூட்டமைப்பின் நடுவராக பணியாற்றி வருவதாகவும், பிரிஜ் பூஷனை பல நாட்களுக்கு முன்பே தெரியுமெனவும்" கூறியுள்ளார்.

மேலும்," தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளிடம், பிரிஜ் பூஷன் தவறாக நடந்துகொண்டுள்ளதை, பலமுறை நேரில், தனது கண்களால் பார்த்துள்ளதாகவும், அது மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்ததாகவும்" தெரிவித்தார்.

மேலும், "அந்த சமயத்தில், வீராங்கனைகள் யாரும் குற்றச்சாட்டினை முன் வைக்க வரவில்லை, அந்நிலையில், நானாக முன்வந்து இது பற்றி பேசுவைது கடினமாக இருந்தது. பிரிஜ் பூஷன், தலைவராக நியமிக்கப்பட்ட பின், 2013ல், கஜகஸ்தானிற்கு இரண்டாவது சுற்றுப்பயணம் சென்ற பொழுது, அன்று எங்கள் அனைவருக்கும் இந்திய உணவு வழங்குவதாக கூறி, அழைப்பு விடுத்தார். அப்பொழுது அவரும், தாய்லாந்தை சேர்ந்த அவரது கூட்டாளிகளும் மது போதையில் இருந்தனர். அச்சமயத்தில், அங்கிருந்த பெண்களிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவதை பார்த்ததாகவும்" கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், நாட்டினுள்ளே சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அவருடன் எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் இருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பிரிஜ் பூஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கு, " திருடன் என்றைக்குமே தனது தவறினை ஒப்புக்கொள்ள மாட்டான்" எனவும் விமர்சித்துள்ளார். ஜக்பீர் சிங்கின் இந்த குற்றசாட்டு, வீராங்கனைகளின் குற்றச்சாட்டினை வலிமைப்படுத்தும் சாட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.