ஐ.பி.எல். போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசியில் ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்க்ரம், திரிபாதி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். திரிபாதி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் . மறுபுறம் மார்க்ரம் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் 17 புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஹைதராபாத் அணி 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.