ஐபிஎல் டிக்கெட்...சேப்பாக்கத்தில் விற்பனை!!

ஐபிஎல் டிக்கெட்...சேப்பாக்கத்தில் விற்பனை!!

சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறுகிறது. 

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் உள்ள 2 கவுண்ட்டர்களில் ஆயிரத்து 500 மற்றும் 2 ஆயிரம், 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com