கள்ளக்குறிச்சியில் கபடி போட்டி...!  தலைவர்கள் பெயரில்  கோப்பைகள்...! 

கள்ளக்குறிச்சியில் கபடி போட்டி...!  தலைவர்கள் பெயரில்  கோப்பைகள்...! 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ரங்கை சிறுத்தைகள் என்ற அமைப்பினர்  மாவட்ட அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடத்தினர்.

இதில் திருநெல்வேலி, சென்னை, ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், வேலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண் கபடி அணி  வீரர்கள் கலந்து கொண்டனர். 

முதல் பரிசாக வெற்றி பெற்ற அணியினருக்கு அம்பேத்கர் கோப்பை, இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு பெரியார் கோப்பை, மூன்றாம் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு காரல் மார்க்ஸ் கோப்பை, நான்காம் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு இரட்டைமலை சீனிவாசன் கோப்பை, ஐந்தாம் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு பிரபாகரன் கோப்பை, ஆறாம் பரிசு வெற்றி பெற்ற அணியினருக்கு திருமாவளவன் கோப்பை மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.

போட்டியினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பார்வையாளர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் வருகை தந்து கண்டுரசித்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com