ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகளை OTTல் இலவசமாக காணலாம்!

ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகளை OTTல்  இலவசமாக காணலாம்!

ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஹாட்ஸ்டார்  OTT தளத்தில், மொபைல் பயனர்கள் இலவசமாக காணலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பயனர்கள் அனைவரும் இலவசமாக பார்க்கும் வசதியை ஜியோ சினிமா வழங்கியிருந்தது. இதனால், பெரும்பாலான ஐ.பி.எல் ரசிகர்கள் நேரில் சென்று பார்க்க இயலாத பொழுது, ஜியோ சினிமாவில் இலவசமாக கண்டுகளித்தனர். இதில், ஐ.பி.எல் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பியதில், ஜியோ சினிமா வெற்றி கண்டது. 

இந்நிலையில், நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஹாட்ஸ்டார் தளத்தில், இலவசமாக ஒளிபரப்பப்படும் என, ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றி ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் துணை தலைவர் கூறியதாவது: ஐ.பி.எல் போட்டிகளை, ஜியோ சினிமா இலவசமாக ஒளிப்பரப்பியத்தில், ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்காக, ஹாட்ஸ்டார் பயனர்கள் மறுபடியும் ஹாட்ஸ்டார் பக்கம் சாய்ந்துள்ளனர். அதனை தக்கவைப்பதற்காகவும் , கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்தும் நோக்கிலும், நடக்கவிருக்கும் போட்டிகளை, ஹாட்ஸ்டார் பயனர்கள், தங்கள் மொபைல் போனில் இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com