பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப் படவில்லை எனில், மீண்டும் போராட்டக் களத்தில் குதிப்போம்: சாக்ஷி மாலிக் எச்சரிக்கை!

பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப் படவில்லை எனில், மீண்டும் போராட்டக் களத்தில் குதிப்போம்: சாக்ஷி மாலிக் எச்சரிக்கை!

பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல், டெல்லி ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் எதிரொலியாக போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 

இந்நிலையில், வரும் 16-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யவில்லை எனில், ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை புறக்கணிப்போம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமன்றி, ஜூன் 16-ஆம் தேதிமுதல் மீண்டும் போராட்டக் களத்தில் குதிப்போம் என மல்யுத்த வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com