விராட் கோலிக்கு வெள்ளி கிரிக்கெட் மட்டையை பரிசளித்த இலங்கை வீரர்!!

விராட் கோலிக்கு வெள்ளி கிரிக்கெட் மட்டையை பரிசளித்த இலங்கை வீரர்!!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் வெள்ளியால் ஆன கிரிக்கெட் மட்டையை பரிசளித்துள்ளார். 

ஆசிய கோப்பையின் சூப்பர் நான்கு சுற்றில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது, இலங்கையை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பந்து வீசியுள்ளார்கள். 

அப்போது இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் விராட் கோலி கலந்துரையாடி கிரிக்கெட் நுணுக்கங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது ஒரு இளம் வீரர், வெள்ளியால் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டையை கோலிக்கு அன்புப் பரிசாக வழங்கியுள்ளார். இதனை பிசிசிஐ தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com