சென்னை வந்த சுனில் கவாஸ்கர்.. ரசிகர்கள் உற்சாகம்!!

சென்னை வந்த சுனில் கவாஸ்கர்.. ரசிகர்கள் உற்சாகம்!!

சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சினில் கவாஸ்கர்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் முதல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜீன்ஸ் அணிக்கும் நடைபெறும் போட்டியை பார்ப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான சுனில் கவாஸ்கர் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.  முன்னதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நட்சத்திர வீரர்கள் விமான நிலையம் வந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com