இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்தினால் ஆபத்து அதிகரிக்கும் : முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மைக் ஹஸ்ஸி…

இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்தினால் ஆபத்து அதிகரிக்கும் : முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மைக் ஹஸ்ஸி…

இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்துவது கடினம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்டு, தற்போது ஒருவழியாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ள ஹஸ்ஸி, இந்தியாவில் உள்ள கொரோனா நிலைமைகளால் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்துவது கடினம் எனத் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகமான அணி வீரர்கள் வருவார்கள் மேலும் அதிக இடங்களில் போட்டிகளை நடத்த வேண்டி இருக்கும் என்பதால் ஆபத்து அதிகம் என மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.