தான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல என கூறும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், எந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்பதை தானே தீர்மானிக்க சுதந்திரம் வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.
இதனால் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இழந்த போதிலும், அவர் டென்னிஸ் விளையாட்டிற்கான ஏடிபி தர வரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறார்.
இந்தநிலையில், தடுப்பூசி விவகாரம் பற்றி பேசிய ஜோகோவிச், தான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது உடல் சார்ந்த விஷயத்தில், தனது கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது என கூறியுள்ள அவர், எதிர்காலத்தில் தடுப்பூசிக்காக முக்கிய போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் கவலை படமாட்டேன் என கூறியுள்ளார்.