மகளிர் டி20: குஜராத்தை வீழ்த்திய உ.பி.வாரியர்ஸ்...!

மகளிர் டி20: குஜராத்தை வீழ்த்திய உ.பி.வாரியர்ஸ்...!

மகளிர் டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் களம் இறங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தொடரில், குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி, தங்களுடைய சிறப்பான ஆட்டத்தால் 19 புள்ளி 5 ஒவர்களில் 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபார வெற்றி பெற்றது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com