என்ன சோதனை இது.. மும்பை அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.. ரோஹித் சர்மா என்ன செய்ய போகிறார்??

என்ன சோதனை இது.. மும்பை அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.. ரோஹித் சர்மா என்ன செய்ய போகிறார்??
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 15-வது தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே மும்பை அணியின் வீரர் ஆர்ச்சர் அடுத்த ஆண்டு தான் விளையாடுவார் என அறிவித்தார். தற்போது மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மும்பை VS வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ்க்கு உடல் தகுதி பயிற்சி நடத்தப்பட்டது. அதில், அவர் தோல்வியை தழுவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் காயத்திலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மும்பை அணிக்காக சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். மும்பை அணியின் பேட்டிங் தூணாக இருப்பவர் சூரியகுமார் யாதவ். அவர் இல்லை என்றால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. இவர் ஆடவில்லை என்றால், மாற்று வீரர் யாரை பயன்படுத்தலாம் என்ற பலத்த யோசனையில் ரோஹித் சர்மா உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com