ருத்துராஜ்-க்கு என்ன ஆச்சு?.. ஏன் இந்த சொதப்பல்.. சிஎஸ்கே அணியில் இடம் உண்டா? - கேப்டன் முடிவு என்ன?

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரான ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ருத்துராஜ்-க்கு என்ன ஆச்சு?.. ஏன் இந்த சொதப்பல்.. சிஎஸ்கே அணியில் இடம் உண்டா? - கேப்டன் முடிவு என்ன?

ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதாவது ஹாட்ரிக் தோல்வி என்று சொல்லலாம். கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.

இந்த தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே-வின் நச்சத்திர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் 0,1,1 என் மூன்று போட்டிகளிலும் சொதப்பினார்.

இந்நிலையில், சிஎஸ்கே தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஜடேஜா, ருத்துராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவோம். அவர் அடுத்த போட்டியிலும் விளையாடுவார். ருத்துராஜ் மீண்டும் ஃபார்ம்க்கு வருவார் என நாங்கள் நம்புகிறோம். கடந்த காலங்களில் சிஎஸ்கே-வுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இதனால், தொடர்ந்து அவருக்கு ஊக்கம் அளிப்போம்.

மேலும் தோல்விக்கு பேட்டிங் தான் காரணம் என கூறிய ஜடேஜா.. அடுத்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்பிக்கையாக கூறினார்.  இந்தப் போட்டியில் சிவம் துபே சிறப்பாக விளையாடினார். அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்று கேப்டன் ஜடேஜா கூறினார்.

சிஎஸ்கே-வுக்கு அடுத்த போட்டி துவங்க இன்னும் 5 நாட்கள் உள்ளது. அதாவது அடுத்த போட்டி வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை ஐதராபாத் அணியுடன் நடைபெறுகிறது. எனவே இந்த ஐந்து நாட்களில் சிஎஸ்கே தனது யுக்தியை மாற்றி அமைத்து வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.