வெற்றியைத் தழுவும் இந்திய அணிகள்.. ஆண்களுக்கு சலிக்காத பெண்கள் தரும் பெருமை...

ஆண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றதை நிலையில், பெண்கள் ஜூனியர் குழு உலகக்கோப்பையை வென்றுள்ளது.

வெற்றியைத் தழுவும் இந்திய அணிகள்.. ஆண்களுக்கு சலிக்காத பெண்கள் தரும் பெருமை...

2வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. நியூசிலாந்து - இந்தியா ஆணிக்கு  2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 19 க்கு 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. எனவே இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 க்கு 1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

மேலும் படிக்க | 1 ஆண்டில் 1000 ரன்களை கடந்த முதல் மேட்ஸ் மேன்...ஐசிசி விருதுக்கு தேர்வான இந்திய வீரர்...!

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா ஆணி வெற்றி பெற்று சாதனை படைத்ததுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.  இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா அணி இறுதியில்  69 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், வெற்றி பெற்ற இந்தியா ஆணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை மற்றும் அடுத்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | தொடரைக் கைப்பற்றிய இந்தியா....தரவரிசையில் முதலிடம்!!!