இன்று மோதும் அணிகள் பட்டியல்...நம்பிக்கை தெரிவித்த ரசிகர்கள்!

இன்று மோதும் அணிகள் பட்டியல்...நம்பிக்கை தெரிவித்த ரசிகர்கள்!

கத்தாரில் இன்று நடைபெறும் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

கோலாகல திருவிழா:

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. இதையடுத்து 22வது உலக கோப்பையை யார் வெல்ல போகிறார்கள் என்ற பெரும் ஆவலுடன் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.  

இன்று மோதும் 4 அணிகள்:

இன்றைய தொடரின் முதல் ஆட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு வேல்ஸ் அணி - ஈரான் அணியுடன் மோதுகிறது. இதேபோல் மாலை 6.30 மணிக்கு கத்தார் - செனேகல் அணியுடனும், இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து - ஈக்குவேடார் அணியுடனும் மோதவுள்ளன. அதேபோல், இரவு 12:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி, அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் இன்று நடைபெறக்கூடிய போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் கத்தார் அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com