1 கிலே தக்காளி ரூ.80க்கு விற்பனை... அதிகரித்து வரும் காய்கறி விலை...

சென்னையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

1 கிலே தக்காளி ரூ.80க்கு விற்பனை... அதிகரித்து வரும் காய்கறி விலை...

பருவமழை அதிகரிப்பால், தக்காளி பயிர்கள் அழுகி நாசமடைந்து வருகின்றன. இதனால் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர் மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு காரமணாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.  நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 லாரி தக்காளி கோயம்பேடு சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 3 நாட்களில் இந்த எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது. இதனால், ஒரு வாரத்திற்கு முன் 300 ரூபாய்க்கு விற்ற ஒரு கூடை தக்காளி தற்போது, 750 ரூபாய் முதல், 850 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோன்று, வெங்காயம், உருளைக் கிழங்கு என அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் ஒரு மாதம் வரை தொடரும் எனக் கூறிய தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்தால் கணிசமான அளவு விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.