5 மாவட்டங்களில் 1.75 கோடி ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் - அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

5 மாவட்டங்களில் 1.75 கோடி ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் - அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் அலுவலக கட்டிடத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவுவிட்டிருந்தது.  இந்த நிலையில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, சிறுபான்மையினர் நல இயக்குனர் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.