அரியலூர் பட்டாசு அலையில் கோரவிபத்து... பலர் உயிரிழப்பு!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே நாட்டு வெடி குண்டு தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். 

அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 

இதனால் கடையில் தீபாவளி விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசு ரகங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை வெடித்து சிதறின. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தால் அந்த இடமே புகை மண்டலமாக கட்சியளித்தது.  

இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த கோரா விபத்தை பற்றி தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.