6,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி!

6,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஆறாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 27 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகளை அலங்கரிக்க உத்தரவு!

அதன்படி, ஐபோன்களுக்கான சிப்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பாக்ஸ்கான் கம்பெனி விரிவாக்கம், எலக்ட்ரானிக் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பத்து தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 6000 கோடி ரூபாய் முதலீட்டில்  10 தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.