தேவர் சிலைக்கு 10 கிலோ வெள்ளி கவசம்...! வழங்கும் ஓபிஎஸ்...!

தேவர் சிலைக்கு 10 கிலோ வெள்ளி கவசம்...! வழங்கும் ஓபிஎஸ்...!
Published on
Updated on
1 min read

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 10 கிலோ 400 கிராம் அளவிலான வெள்ளி கவசத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 - வது ஜெயந்தி விழா மற்றும் 60 - வது குருபூஜை விழா இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

அந்த வகையில், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு செல்லும் முன் ஓ.பி.எஸ், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 10 கிலோ 400 கிராம் அளவிலான வெள்ளி கவசத்தை  ஓபிஎஸ் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை நினைவிடக் காப்பாளர் காந்தி மீனாள் அம்மையாரிடம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com