நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு 10 லட்சம் தடுப்பூசி !!

நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு 10 லட்சம் தடுப்பூசி !!

நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கென மத்திய அரசு சுமார் 10 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தசூழ்நிலையில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட  ஏதுவாக நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 2லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அங்கு தொற்று பாதித்து சுமார் 400 பேர் உயிரிழந்த போதும், தொடர்ந்து ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.  இதில் சுமார் 69 ஆயிரம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தொற்று பாதிப்பிலிருந்து ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில், 10 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என நிலக்கரி சுரங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.