நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்... விரைவில்!!

நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்... விரைவில்!!

தன்னை நிருபிக்கவே செயல்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் உள்ள பிரச்சனையை தான் பேசுகிறார்கள்.  ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்காக செயல்படுகிறார் என நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

பிறந்தாள் கூட்டம்:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும் இதில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.  பின்னர் மேடையில் பேசிய தமிழக அமைச்சர் கே.என்.நேரு, புகைப்பட கண்காட்சியை பார்த்த பின்னர் எப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும் என்பதை அது வெளிப்படுத்துவதாக உள்ளது என கூறினார்.

ஏகடியம் பேசிய அமைச்சர்:

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் முதலமைச்சராக ஸ்டாலினுக்கு ராசி இல்லையென ஏகடியம் பேசினார் எனவும் ஆனால் இன்று இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று பெருமையாக சொல்கிறார்கள் எனவும் இந்தியாவிற்கு நீங்கள் தேவை கூட்டணி அமைக்க வாருங்கள் என அழைக்கின்றனர் எனவும் திரிவித்தார்.  மேலும் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் எனவும் அதை சரிசெய்ய அமைத்த திருப்புகழ் கமிட்டி இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் எனவும் கூறினார்.

இறுமாப்பு:

மேலும் சென்னையில் உள்ள 15 லட்ச மக்களுக்கு இல்லம் தோறும் குடிநீர் வழங்க எங்களது துறை உழைக்கிறது எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.  தொடர்ந்து ஜெயலலிதா கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லையென இறுமாப்பாக தெரிவித்தார் என்று கூறிய கே. என். நேரு ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

மக்களுக்காக:

மீசை, வேட்டி கட்டிணா வா என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரை பார்த்து பேசினார் எனவும் தன்னை நிருபிக்க தன்னை பற்றி தான் செயல்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறிய அமைச்சர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் உள்ள பிரச்சனையை பற்றி மட்டுமே தான் பேசுகிறார்கள் எனவும் ஆனால் தமிழக முதலமைச்சர் மக்களுக்காக செயல்படுகிறார் எனவும் கூறினார்.  

விரைவில்..:

மாநகராட்சி சார்பாக நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்க உள்ளோம் எனவும் இந்தியாவை வழிநடத்தும்  காங்கிரஸ் கட்சியோடு தான் இருப்போம் என கூறிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான் எனவும் ப்ச்சினார் அமைச்சர் கே. என். நேரு.  மேலும் கருணாநிதியை விட 100 சதவீதம் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் எனவும் முன்னேறிய சமுதாயத்தினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் தெரிவித்த அவர் இருக்கும் காலம் வரை அவரே முதலமைச்சர் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   விளையாட்டினால் முன்னேறும் வடுவூர் கிராமம்...!!