15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

தமிழகத்தில் 15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்பி நவாஸ்கனி, எம்எல்ஏ முருகேசன். முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன்,  சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் 5 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரத்து 865 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 64 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 10 முதல் 15 நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் மிக துரிதமாக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் 70% தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்த மாதிரியான அலை வந்தாலும் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என என கூறியுள்ளது.

தமிழகத்தில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கோவில்கள் திறப்பது குறித்து அடுத்த ஊரடங்கு தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.