தேர்வு செய்யப்பட்ட பயனர்களின் வங்கி கணக்குகளில் எப்பொழுது 1000 ரூ செலுத்தப்படும்?

தேர்வு செய்யப்பட்ட பயனர்களின் வங்கி கணக்குகளில் எப்பொழுது 1000 ரூ செலுத்தப்படும்?
Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் எப்போது ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படுகிறது. செப்டம்பர் 20ம் தேதிக்குள், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது.

உரிமைத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் மின்சார யூனிட் பயன்பாடும் ஒரு காரணியாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.33 கோடி வீட்டு மின்சார பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்களில், ஆண்டுக்கு  3 ஆயிரத்து 600 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. 

இது ஒட்டுமொத்த மின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதம் தான். மற்றவர்கள் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் பட்டியலில் வந்து விடுகின்றனர். எனவே, பயனாளிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மின் பயன்பாட்டு அளவை ஒரு நிபந்தனையாக வைக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com