மகாகவி பாரதியாரின் 101வது நினைவு தினம்...அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

மகாகவி பாரதியாரின் 101வது நினைவு தினம்...அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

பாரதியாரின் 101வது நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

மகாகவி நாள்; அரசியல் தலைவர்கள் மரியாதை:

பாரதியாரின் நினைவைப்போற்றும் வகையில், அவர் மறைந்த தினமான செப்டம்பர் 11ஆம் தேதி, மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, மகாகவி நாளான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ்வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இதையும் படிக்க: சிக்கன் தருவியா...மாட்டியா...ரகளை செய்த இளைஞர்கள்...!

பாரதியாரின் கவிதைகள்:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, நூறு ஆண்டுகள் கடந்தும், பாரதியாரின் கவிதைகள் இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக கூறினார். 

மரியாதை செலுத்தினார் தமிழிசை:

இதையடுத்து தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாரதியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.