11 சாமி சப்பரங்களில் அணிவகுத்து உலா வந்த அம்மன்கள்...!

Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தசரா திருவிழா நிறைவு நாளில் 11 சாமி சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து சென்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 14ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து  தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்ம உச்சினிமாகாளி, உலகம்மன், புது உலகம்மன், வண்ணாரபேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களில் தசரா திருவிழா தொடங்கியது.

10 தினங்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் நேற்று இரவு அம்மன்கள் கோயில்களிலிருந்து சிம்ம வாகனத்தில் போா்கோலம் புாிந்து 11 சப்பரங்களில் வலம் வந்தனா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com