11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது...!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  தொடங்கியது. 

நேற்றைய தினம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், இன்று பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 4லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 3 லட்சத்து 67 ஆயிரம் மாணவிகள் என, மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். அது தவிர 5 ஆயிரத்து 338 தனித் தேர்வர்களும், 5 ஆயிரத்து 835 மாற்றுத்திறனாளிகளும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

சென்னையை பொறுத்தவரை 398 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 574 மாணவிகள், 19 ஆயிரத்து 548 மாணவர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 122 மாணவர்கள் பதினோறாம் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்காக 180 தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com