நெய்வேலி ஜெயப்பிரியா குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 12 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்...

நெய்வேலி ஜெயப்பிரியா குழுமத்துக்குச் சொந்தமான 30  இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 12 கோடி ரொக்கம் மற்றும் 250 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி ஜெயப்பிரியா குழுமத்துக்குச்  சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 12 கோடி ரூபாய் ரொக்கம்  பறிமுதல்...

நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு சிட் பண்டு, பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்திவரும் ஜெயப்பிரியா குழுமம் அதிகப்படியான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வருமானவரித் துறையினர் கடந்த 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இரு தினங்கள் நெய்வேலி, சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள ஜெயப்பிரியா குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் ஜெயப்பிரியா குழுமம் தங்களது பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க கிளவுட் சர்வர்களை பயன்படுத்தி, நிர்வாக ரீதியிலான முக்கிய நபர்கள் மூலம் அதை ரகசியமாக பராமரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிட் பண்ட் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய கணக்கில் வராத வருமானத்துக்கு உண்டான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்றதற்கு உண்டான ரசீதுகள் சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கணக்கில் காட்டாத வருவாய் மூலம் ஜெயப்பிரியா குழுமம் அசையா சொத்துக்கள்  வாங்கி அதன் மூலம் 250 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளதாகவும், 30 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் காட்டாத பணம் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.