கிராமப்புற இளைஞர்களுக்காக 144 பயிற்சி மையங்கள் செயல்படுகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க 144 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் முதல்வன் இணையதளம், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும்  அழைப்பு மையத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் ஒரே நோக்கம் என்றும், அதன் காரணமாக கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க 144 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். 

தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெற்று ஒரு லட்சம் இளைஞர்கள்  வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com