கல்லணையில் இருந்து வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறப்பு...!

கல்லணையில் இருந்து வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறப்பு...!
Published on
Updated on
1 min read

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 600 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முப்போக நெல் சாகுபடிக்காக கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மாயனூர், முக்கொம்பை வழியாக கல்லணைக்கு வந்து சேர்ந்தது. 

இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் வினாடிக்கு சுமார் ஆயிரத்து 600 கன அடி தண்ணீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்மூலம் 12 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 18 லட்சம் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரோடு, மொடக்குறிச்சி, பவானி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 743 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், காலிங்கராயன் வாய்க்காலில் 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்திற்கு உட்பட்ட இரண்டரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெற்று வருகின்றது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com