தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  

தமிழகத்தில் மேலும் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி   

தமிழகத்தில் மேலும் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, புதிதாக 1,658 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டு மொத்த பாதிப்பு 26 லட்சத்து  38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்களில்  ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் சிகிச்சைப் பலனினிறி உயிரிழந்ததாகவும், 16 ஆயிரத்து 636 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மாவட்ட அளவிலான பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 226 பேரும், கோவையில் 224 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்