‘ஆப்பரேஷன் புதுவாழ்வு’ மூலம் 198 பிச்சைக்காரர்களுக்குக் கிடைத்த வாழ்வு...

1800 பிச்சைகாரர்கள் சுற்றி சுற்றிவளைக்கப் பட்டனர். 40 பேர் சொந்த வீடு வைத்துக் கொண்டு பிச்சைத்தொழில் செய்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
‘ஆப்பரேஷன் புதுவாழ்வு’ மூலம் 198 பிச்சைக்காரர்களுக்குக் கிடைத்த வாழ்வு...
Published on
Updated on
1 min read

கரூரில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை வைத்து விபூதி சித்தர் எனக் கூறி பணம் சம்பாதித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆபரேஷன் புது வாழ்வு என்ற அடிப்படையில் பிச்சைக்காரர்களாக திரிபவர்களை புது வாழ்வு அளிக்கும்  வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

அதில் இதுவரை 1800 பிச்சைக்காரர்கள் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.

  • இதில், 255 பேர் அரசு இல்லங்களிலும்,

  • 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களிலும்

  • 367 பேர் பெற்றோரிடம்

  • 27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்

குற்றச்செயலில் ஈடுபட்ட 198 பிச்சைகாரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று முதல் நடந்த ஆப்பரேஷன் புதுவாழ்வு வேட்டையில் அதிகபட்சமாக தாம்பரம் பெருநகர காவல் துறையினர் 207 பேர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 பேர்களும், ரயில்வே காவல் துறையில்
139 பேர்களும் மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினர் 122 பேரை பிடித்து தக்க நடவடிக்கை எடுத்தனர்.

குழந்தைகளை, பிச்கைகாரர்களாக்கி, அவர்களை நகர் புறங்களில் பிச்சை எடுக்க வைக்கும் ஆள்கட்த்தல் கும்பல் பற்றிய தகவல் தொலைபேசி 044 28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும், அவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை விசாரணை செய்ததில் வற்புறுத்தி பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் யாரும் தமிழகத்தில் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக ஆபரேஷன் புது வாழ்வு விசாரணையின் போது சொந்த வீடு இருந்தும் 40 பேர் பிச்சை எடுப்பதை தொழிலாக வைத்து போக்குவரத்து சிக்னல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கோயில்களில் தங்கியிருப்பவர்களையும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com